பக்கங்கள்

பக்கங்கள்

1 நவ., 2012

ராஜீவ்காந்தியின் கொலைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: கே.பி.முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார்.இந்திய மத்திய புலனாய்வு, அதிகாரிகள் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளதாக த இண்டியன் எக்ஸ் பிரஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 
அண்மையில் இடம்பெற்ற இந்த விசாரணையின் போது, முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை தொடர்பில் கே.பியிடம் வினவப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் இடம்பெற்ற இந்த விசாரணை தொடர்பான எவ்வித முன்னேற்ற அறிக்கைகளும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், அண்மையில் செய்தி சேவை ஒன்றுக்கு குமரன் பத்மநாதன் அளித்த செவ்வியில், தமக்கும் அந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தி சேவை தெரிவித்துள்ளது.