பக்கங்கள்

பக்கங்கள்

7 நவ., 2012



சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸிற்கு எதிராக நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவிற்கு எதிராக அவதூறு செய்திகளை பிரசுரித்ததாக பிரட்ரிக்கா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த அவதூறு குற்றச்சட்டு வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்க எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணைகளுக்கு பிரட்ரிக்கா ஜேன்ஸ் சமூகமளிக்கவில்லை. நீதிமன்றில் ஆஜராகத காரணத்தினால் பிரட்ரிக்கா ஜேன்ஸிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதவான் ஸ்ரீஸ்கந்தராஜா பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த மேன்முறையீடு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 25ம் திகதி நடைபெறவுள்ளது.
இதேவேளை, பிரட்ரிக்கா ஜேன்ஸ் மேற்குலக நாடொன்றில் அரசியல் புகலிடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.