பக்கங்கள்

பக்கங்கள்

5 நவ., 2012

முல்லை. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர் சரவணபவன் எம்.பி
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசியத் தொண்டு நிறுவனமான சக்தி அறவாரியமும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் இணைந்து அத்தியாவசியப் பொருட்களை இன்று வழங்கி வைத்தனர். 
 
இதன்படி புதுமாத்தளனில் 100 குடும்பங்களுக்கும், முள்ளிவாய்க்காலில் 200 குடும்பங்களுக்கும், ஆனந்தபுரத்தில் 100 குடும்பங்களுக்கும் என முல்லை மாவட்டத்தில் 400 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
 
இந்த பொருட்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மக்களுக்கு வழங்கி வைத்தார்.