பக்கங்கள்

பக்கங்கள்

9 நவ., 2012



         ம.தி.மு.க. கரூர் மாநாட்டிற்குப் பிறகு தான் கொஞ்சம், கொஞ்சமாக புகை கக்கத் தொடங்கியது வைகோ, நாஞ்சில் சம்பத் இடையே வெகுநாட் களாக களவாடிக்கொண் டிருந்த விரிசல்.

அந்த விரிசலை இருவரும் வார்த்தைகளால் சுட்டிக்காட்டாமல் ஒவ்வொருத்தரின்  நடவடிக்கைகளால் காட்டி வருகின்றனர். இதனால் குழம்பிப்போயிருக்கும் ம.தி.மு.க.வினருக்கு விடை சொல்லும் விதமாக நாஞ்சில் சம்பத்தை சந்தித் தோம்.

வைகோவுக்கும் உங்களுக்கும் தற்போது ஏற்பட்டுள்ள உறவு விரிசலுக்கு அதுவா? இதுவா? என தொண்டர்கள் குழம்பியிருக்கும் நிலையில் உண்மையான காரணம் என்ன?


சம்பத் : என் தரப்பில்  நான் குற்றம் நினைக்கவில்லை. இயல்பாகவே எந்தத்  தவறும் இழைக்கிற மனோபலம் எனக்கில்லை. 4 பேர் நகைக்கும்படியாகவும் 40 பேர் முகம் சுழிக்கும் படியாகவும் நடந்துகொள்ளவில்லை. வைகோ மனம் சுழிக்கும்படி அவரிடம் நான் எதுவும் கேட்கவும் இல்லை. நான் கேட்டு அவர் தரவில்லையென்றால்    அதனால் எனக்கு ஒரு மன வருத்தம் வரலாம்.