பக்கங்கள்

பக்கங்கள்

8 நவ., 2012


சயீப் அலிகான் குடும்ப சொத்து பிரச்சனை : கரீனா கபூர் அதிர்ச்சி
இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கும் நடிகை கரீனா கபூருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனால் சொத்துக்கள் கைவிட்டு போய்விடுமோ என குடும்பத்தினர் அஞ்சுகிறார்கள்.


எனவே அவற்றை பிரித்துக் கொடுக்கும்படி போர்க்கொடி தூக்கி உள்ளனர். சயீப் அலிகான் ‘பட்டோடி நவாப்’ பரம்பரையை சேர்ந்தவர். பட்டோடி அரண்மனை, விவசாய நிலங்கள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் என பட்டோடி நவாப் குடும்பத்தினருக்கு உள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.750 கோடியாகும்
.
மன்சூர் அலிகான் பட்டோடியின் ஒரே மகன் சயீப் அலிகான் என்பதால் இந்த சொத்துக்கள் அவர் கைவசம் உள்ளன. சயீப் அலிகான் சகோதரிகள் சபா, சோகா ஆகியோரும் இதனை அனுபவிக்கிறார்கள். ஆனால் மறைந்த மன்சூர் அலிகான் சகோதரிகள் சலீகா, சபீகா ஆகியோரும் இந்த சொத்துக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். தங்களுக்கு சொத்தில் பங்கு தர வேண்டும் என்றும், வற்புறுத்தி வருகிறார்கள். 
இதனால் சயீப் அலிகான் தாய் சர்மிளா தாகூர் குழப்பமடைந்து உள்ளார். இவர்களின் சொத்து சண்டையை பார்த்த நடிகை கரீனா கபூரும் அதிர்ச்சியாகியுள்ளார்.