பக்கங்கள்

பக்கங்கள்

12 நவ., 2012

ரிதியுடன் உடன் இருந்த ஒருவரே கொலைகாரருக்கு தகவலை வழங்கியுள்ளார்.
பிரான்ஸில் கொல்லப்பட்ட புலிகளின் முக்கிய தளபதி விடயத்தில் பிரான்ஸ் புலனாய்வுத் துறையினர் சில உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

பிரான்ஸ் புலனாய்வு அமைப்பான DCRI இன் ஊடகப் பேச்சாளர் சில விடயங்களை கூறியுள்ளார்.
பிரான்ஸ் புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்ததாக கூறும் விடயங்களே இவை,
* பரிதியுடன் உடன் இருந்த ஒருவரே கொலைகாரருக்கு தகவலை வழங்கியுள்ளார்.
* பரிதி வெளியே வருவதற்காக கொலை செய்தவர்கள் காத்திருந்து சுட்டிருக்கிறார்கள். இதில் நிச்சயம் மூன்று அல்லது நான்கு பேருக்கு தொடர்பு உள்ளது.
* சுடப்பட்ட இடத்தில், சுட்ட குழுவினர் யாரும் காத்திருக்கவில்லை. ஆனால், சுடப்பட்டவர் அங்கு வந்தபோது, சரியாக டைம் பண்ணி அவர்களும் வந்த சேர்ந்து சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
* கொலை நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட செல்போன் தொடர்புகள் பற்றி தகவல் சேகரிக்கப்படுகிறது.
* கொல்லப்பட்ட பரிதியுடன் அன்றைய தினத்தில் பேசியவர்கள் யார் என்பதை விசாரித்துள்ளோம்.