பக்கங்கள்

பக்கங்கள்

11 நவ., 2012


ஜெயலலிதா இல்லாமல் தேமுதிக எம்.எல்.ஏக்கள் இல்லை : சுந்தரராஜன்
மதுரை மாநகராட்சியில் இன்று தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார்.

அவர்,   ‘’நான் தேர்ந்தெடுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முதல்வர் அம்மாவை சந்தித்தேன்.

இதை ஒரு பிரச்சினையாக்குகிறார்கள். நீங்கள் (முதல்வர்) இல்லாமல் நாங்கள் (தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள்) இல்லை என்று சொன்னோம். இதனை ஒரு நாள் அவர் (விஜயகாந்த்) புரிந்து கொள்வார்’’ என்று  பேசினார்.