பக்கங்கள்

பக்கங்கள்

4 டிச., 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று (04) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை நடத்தவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நேற்று முன்தினம் 2ம் திகதி அவசர அழைப்பு ஒன்றை விடுத்திருந்தார். 


எனினும் 4ம் திகதியான இன்று பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

அத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மற்றுமொரு தினத்தை ஒதுக்கித் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்தார்.