பக்கங்கள்

பக்கங்கள்

22 டிச., 2012


சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட சீனர்கள் கைது
இலங்கையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுற்றுலா வீசாக்களின் மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சீனர்களை கைது செய்யும் நோக்கில் குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று விசேட தேடுதல் வேட்டை ஒன்றை நடாத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீனாவில் நிதி மோசடிகளில் ஈடுபட்ட சிலரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதியின்றி செல்லிடப் பேசி விற்பனை செய்தல், கடன் அட்டை மோசடிகளில் ஈடுபடல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சீனர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.