பக்கங்கள்

பக்கங்கள்

7 டிச., 2012

காணாமல் போயுள்ள 10 தமிழ் இளைஞர்கள் முன் நாள் புலிகள் உறுப்பினர் என்றும், தாமே இவர்களைக் கைதுசெய்ததாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்றுதெரிவித்துள்ளார்கள்.
கடந்த 2 தினங்களில் யாழில் சுமார் 10 தமிழ் இளைஞர்கள் காணாமல் போயுள்ளார்கள் என்ற செய்தி ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியுள்ளது யாவரும் அறிந்ததே. யாழில் சில
இடங்களில் வைத்து இவர்கள் காணாமல் போனார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக யாழ் மனித உரிமைக் கழகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டது. ஆனால் இவர்கள் அனைவரும் முன் நாள் புலிகள் உறுப்பினர் என்றும், தாமே இவர்களைக் கைதுசெய்ததாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று காலை தெரிவித்துள்ளார்கள்.


சில புலனாவுத் தகவல்களுக்கு அமைவாகவே இவர்களை தாம் கைதுசெய்துள்ளதாகவும், இவர்கள் அனைவரும் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.