பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2012


தமிழகத்தில் தொடரும் சாதியத் தாக்குதல்களைத் தடுக்க வேண்டும்! பிற்படுத்தப்பட்டோர் வருமான வரம்பை ரூபாய் 12 இலட்சமாக உயர்த்த வேண்டும்! இந்தியத் தலைமை அமைச்சரிடம் தொல்.திருமாவளவன் நேரில் வலியுறுத்தல்
இன்று (22-12-2012) பகல் 12 மணியளவில் இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்தார். அப்போது, அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் தருமபுரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள், குறிப்பாக சொத்துக்கள் சூறையாடல், கொள்ளை, தீ வைப்பு மற்றும் படுகொலைகள் பற்றி விளக்கிக் கூறியதோடு, இவை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் மனு ஒன்றையும், தருமபுரி வன்முறை வெறியாட்டம் தொடர்புடைய புகைப்படங்கள், நாளேடுகளில் வந்த செய்திகளின் நகல்களையும் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களிடம் வழங்கினார். தருமபுரி வன்முறை வெறியாட்டம் குறித்த மையப் புலனாய்வு விசாரணையையும் வலியுறுத்தினார். அத்துடன் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டில் விதிக்கப்பட்டுள்ள கிரீமிலேயர் வருமான உச்ச வரம்பை தற்போதுள்ள நாலரை இலட்சம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற மனுவையும் தலைமை அமைச்சரிடம் தொல்.திருமாவளவன் வழங்கினார். தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்தும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்தும் தொல்.திருமாவளவன் விளக்கிக் கூறியதை கவனமாகக் கேட்டுக்கொண்ட தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், இவை குறித்து மைய அரசு தன்னாலான அளவில் நடவடிக்கை எடுக்கும் என்றும், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பை உயர்த்துவது குறித்துப் பரிசீலனை செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.— தமிழகத்தில் தொடரும் சாதியத் தாக்குதல்களைத் தடுக்க வேண்டும்! - இந் (7 photos)