பக்கங்கள்

பக்கங்கள்

18 டிச., 2012

 ]
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 450 ஓட்டங்களும், இலங்கை 336 ஓட்டங்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் அவுஸ்திரேலியா 278 ஓட்டங்கள் எடுத்தது.

இதனையடுத்து 393 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
அவுஸ்திரேலியா சார்பில் மிட்சல் ஸ்டார்க் 5 விக்கெட்டும், பீட்டர் சிடில் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.
அதிகபட்சமாக சங்கக்காரா 63 ஓட்டங்களும், சமரவீரா 49 ஓட்டங்களும், கருணாரத்ன 30 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் அவுஸ்திரேலியா அணி 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அவுஸ்திரேலியாவின் பீட்டர் சிடில் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.