பக்கங்கள்

பக்கங்கள்

28 டிச., 2012


மாணவி புனிதாவை கற்பழித்து கொன்ற ரவுடி சுப்பையா
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகள் புனிதா (வயது 13). பள்ளி மாணவியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரவுடி சுப்பையாவால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.




இதையடுத்து ரவுடி சுப்பையாவை போலீசார் கைது செய்தனர். கைதான சுப்பையா பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டான்.

இதனிடையே ரவுடி சுப்பையாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்.பி.ராஜேந்திரன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் ஆஷிஷ் குமார் உத்தரவின் பேரில் ரவுடி சுப்பையாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.