பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2012


13ஆவது திருத்தத்திற்கு அப்பால் தீர்வு வழங்க ஆரதவு கிடைத்துள்ளதா?: தயாசிறி


தேசிய பிரச்சினைக்கு பதின் மூன்றாவது திருத்தத்திற்கும் அப்பால் சென்று தீர்வை வழங்குவதற்கு அரசாங்கத்திலுள்ள அனைத்து பங்காளிக் கட்சிகளினதும் ஆதரவு கிடைத்துள்ளதா என பாராளுமன்றத்தில் இன்று கேள்வியெழுப்பிய ஐ.தே. கட்சி எம்.பி. தயாசிறி
ஜயசேகர இது தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள கூற்றில் உண்மையுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.



இக் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு 3 மாதகால அவகாசம் தேவையென இதன் போது அரசாங்க தரப்பால் தெரிவிக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே தயாசிறி ஜயசேகர எம்.பி. இக் கோள்வியை எழுப்பினார்
.