பக்கங்கள்

பக்கங்கள்

13 டிச., 2012

14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் 12 மணிவரையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெறவுள்ளது.
படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்ககோரி வவுனியாவில் எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
காலை 11 மணி முதல் 12 மணிவரையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந் போராட்டம் ஹொரவப்பத்தானை வீதி இலுப்பையடியில் நடைபெற உள்ளது.

வடக்கில் நடைபெறும் ஜனநாயக விரோதச் செயல்களைக் கைவிட வேண்டும், அன்றாடம் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெறும் காணாமல் போகச்செய்தல் மற்றும் கடத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்துவதுடன் காணாமல் போனோர், கடத்தப்பட்டோரை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வடக்கில் ஜனநாயக செயற்பாடுகளை மேற்கொள்ள இடமளிக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.