பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2012

நெதர்லாந்தில் சரக்கு கப்பல்கள் மோதல்: சிப்பந்திகள் 23 பேரை தேடும் பணி தீவிரம்
ஐரோப்பா கண்டத்தில் உள்ள நெதர்லாந்து நாட்டிலிருந்து பின்லாந்து நாட்டிற்கு கார்களை ஏற்றிக்கொண்டு பஹாமஸ் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று வடக்கு கடல் வழியாக சென்றுக்கொண்டிருந்தது. டச்சு கடற்கரை அருகே
சென்ற அந்த கப்பல் சைப்ரஸ் நாட்டுக்கு சொந்தமான ஒரு சரக்கு கப்பலுடன் மோதியது.

இதில் இரு கப்பல்களும் மூழ்க தொடங்கின. அந்த கப்பல்களில் இருந்த 23 சிப்பந்திகளின் நிலைமை பற்றி விவரங்கள் தெரியவில்லை. அவர்களை காப்பாற்ற நெதர்லாந்து மீட்புப்படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தேடும் பணியை மேற்கொண்டுள்ளன. இப்பகுதி ஐரோப்பா கண்டத்திலேயே அதிக கப்பல்கள் பயனிக்கும் பகுதி என்று சொல்லப்படுகிறது.