பக்கங்கள்

பக்கங்கள்

22 டிச., 2012


குஜராத் செல்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா
குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நரேந்திர மோதி வரும் 26-ம் தேதி மீண்டும் பதவி ஏற்கிறார்.நான்காவது முறையாக குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்கும் நரேந்திர
மோதிக்கு அம்மாநில ஆளுநர் கமலா பெனிவால் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.
புதிய அமைச்சரவையுடன் பதவி ஏற்க வசதியாக, மோதி இன்று தமது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். 26-ம் தேதி நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.அருண்ஜெட்லி உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக வரும் 25-ம் தேதி நடைபெறும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், பாரதிய ஜனதா சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராக நரேந்திர மோதி முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்.