பக்கங்கள்

பக்கங்கள்

8 டிச., 2012

ஆஸ்திரேலிய அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.
34-வது சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தொடர்ந்து 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை சந்தித்தது.
 
தொடர்ந்து ஐந்தாவது முறையாக பட்டத்தை பெறவேண்டும் என்று ஆக்ரோசத்தில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.
 
அடுத்து வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா பரம எதிரியான பாகிஸ்தானுடன் நாளை மோத உள்ளது.   இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய, ஒலிம்பிக்கில் வெள்ளிபதக்கம் வென்ற நெதர்லாந்து அணியுடன் மோதுகிறது.