பக்கங்கள்

பக்கங்கள்

16 டிச., 2012

உலகக்கோப்பை கபடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது இந்தியா
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 3-வது கபடி உலகக் கோப்பை இறுதி போட்டி குருஞானக் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக 15 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 16 நாடுகள் கலந்துகொண்டன. இதன் இறுதியாட்டத்தில் இந்தியா பரம எதிரியான பாகிஸ்தானை சந்தித்தது. 


சுக்பீர் சர்வான் தலைமையில் விளையாண்ட இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களை தொடக்கத்திலிருந்தே துவம்சம் செய்தனர். நட்சத்திர செயல்திறனை காட்டிய இந்திய வீரர்கள் 59-22 என்ற புள்ளிகள் கணக்கில் பாகிஸ்தானை மிக எளிமையாக வீழ்த்தி வெற்றிகொண்டனர்.

தொடக்க முதலே முதல் தர விளையாட்டை வெளிப்படுத்திய சுக்பீர் சர்வான் தலைமையிலான இந்திய அணிக்கு முதல் பரிசாக 2 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்பட்டது. இரண்டாவதாக வந்த 1 கோடி ரூபாய் பரிசும், மூன்றாவது வந்த கனடா நாட்டு அணியினருக்கு 51 லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டன.