பக்கங்கள்

பக்கங்கள்

22 டிச., 2012


சீரற்ற காலநிலை: 30 பேர் பலி, 22 பேரை காணவில்லை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 74 ஆயிரத்து 995 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 87 ஆயிரத்து 641 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


வெள்ளம், மண்சரிவு காரணமாக மாத்தளை, குருநாகல், புத்தளம், பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதுடன் 12 ஆயிரத்து 143 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 883 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் 193 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது
.