பக்கங்கள்

பக்கங்கள்

18 டிச., 2012


கனடாவில் போதை கலந்த கேக்கை உண்ட 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி! இலங்கைத் தமிழ் பெண் தொடர்பு
கனடா, மொன்றியலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் உளிவிழா நிகழ்ச்சியில் தமிழ் பெண் ஒருவரினால் வழங்கப்பட்ட கேக் ஐ உண்டவர்கள் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றி தெரியவருவதாவது:
கனடா மொன்றியலில் தமிழ் கத்தோலிக்கருக்கென தானியான தேவாலயம் உள்ளது.
க்ந்த 15.12.2012 இரவு இவர்களின் ஒளிவிழா நிகழ்ச்சி (நத்தாரை முன்னிட்டு) ஒரு பாடசாலையில் நடந்தது.
அங்கு ஒரு தமிழ்ப் பெண் கேக் பொதியை வழங்கியுள்ளார்,
அதை பெற்றுக்கொண்டவர்கள் பகிர்ந்து உண்ணும் போது வாந்தி,மயக்கம் ,தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது,
உடன் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் பாதிக்கப்பட்ட 30 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு உணவுப் பதார்த்தங்களை சோதனை செய்தபோது, கேக் இல் பயங்கர போதைப்பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.இது மொன்றியல் தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அத்துடன் இதில் ஒரு தமிழ் பெண்ணும் சம்பந்தப்பட்டுள்ளது கவலைக்கிடமான விடயமாகப் பார்க்கப்படுகின்றது.
பொது இடங்களில் வழங்கப்படும் உணவு விடயத்தில் தமிழர்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.