பக்கங்கள்

பக்கங்கள்

29 டிச., 2012


முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் 313 பேர் மீண்டும் சமூகத்துடன்

 


புனர்வாழ்வளிக்கப்பட்ட 313 முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர். அடுத்த மாதம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

குறித்த முன்னாள் போராளிகள் அவர்களது குடும்பத்தாருடன் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டிஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வெலிகந்த - கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வழிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் குறுகிய கால புனர்வாழ்வுத்திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன் அவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்படாத முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான போதிலும் அவர்கள் இதுவரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவில்லை அவர் தெரிவித்துள்ளார்.