பக்கங்கள்

பக்கங்கள்

25 டிச., 2012


வவுனியாவில் 3,428 குடும்பங்கள் இடப்பெயர்வு; மேலும் அதிகரிக்கலாம்
வவுனியாவில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக 3428 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

இன்றும் மழைபெய்வதால் இடம் பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அந்த நிலையம் தெரிவிக்கின்றது.
 
இதுவரை வவுனியா பிரதேச செயலக பிரிவில் 3183குடும்பக்களும் வவுனியா தெற்க்கு பிரதேச செயலக பிரிவில் 72குடும்பக்களும் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 173 குடும்பக்களும் இதுவரை இடம் பெயர்ந்துள்ளன.
 
இவர்களுக்கென தற்போது 10 நலன்புரி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதுடன்,மழை தொடர்ந்தால்  நிலையங்களை மேலும் அதிகரிக்க வேண்டி வரும் என மாவட்ட இடர் முகாமைப்பிரிவு தெரிவித்துள்ளது.