பக்கங்கள்

பக்கங்கள்

19 டிச., 2012


உக்ரைன் : கடுங்குளிரால் 37 பேர் பலி
உக்ரைன் நாட்டில், கடுங்குளிரால், 37 பேர் பலியாகியுள்ளனர். ஐரோப்பிய நாடான உக்ரைனில், தற்போது மைனஸ், 17 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் காணப்படுகிறது.


இதனால், பலரது உடலின் வெப்பநிலை, கணிசமாக குறைந்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில், இதுவரை, 37 பேர் குளிர் தாங்க முடியாமல் இறந்து விட்டனர்.
வீடில்லாமல் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்காக, உக்ரைன் அரசு, 1,500 தங்கும் இடங்களை அமைத்து, உணவு வழங்கி வருகிறது.கடும் பனி பொழிவால், கீவ் நகர், சாலையில் பனி குவியல்கள் காணப்படுகின்றன. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.