பக்கங்கள்

பக்கங்கள்

16 டிச., 2012


 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 87 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்துள்ளது.
ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்து இருந்தது.
 
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 450 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. மைக் ஹஸ்சி சதம் அடித்தார். அவர் 115 ரன்னும், கேப்டன் கிளார்க் 74 ரன்னும், வடே 68 ரன்னும் எடுத்தனர். இலங்கை தரப்பில் வெலுகேந்திரா 3 விக்கெட் கைப்பற்றினார்.
 
பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கருணாரத்னே 14, சங்கக்காரா 4, ஜெயவர்த்தனே 12 , சமரவீரா 7 ரன்களிலும் அவுட்டாகினார்கள். தில்ஷன் மட்டும் தாக்குப்பிடித்து 50 ரன்கள் எடுத்து அவுட்டாகமல் இருக்கிறார். 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 87 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்துள்ளது.