பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2012


புலனாய்வுப் பிரிவினரால் வல்வெட்டித்துறை மாணவன் கடத்தல் - மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
வ்ல்வெட்டித்துறையில் தண்ணீர் எடுக்கச் சென்ற பாடசாலை மாணவனை படைப்புலனாய்வாளர்கள் வீட்டாருக்குத் தெரியாமல் கடத்திச் சென்ற நிலையில் குறித்த மாணவனைக் காணாத பெற்றோர் யாழ்.மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளனர்.
வல்வெட்டித்துறை ஊறணி பகுதியைச் சேர்ந்த அருலம்பலம் கிசோக்ராஜ் என்ற 19வயது பாடசாலை மாணவன் நேற்றய தினம் குடி தண்ணீர் எடுப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளான். எனினும் அவன் மாலை வரையில் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் குறித்த மாணவனை தேடிய வீட்டார் இன்று காலை வல்வெட்டித்துறை பொலிஸிலும், யாழ்.மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு கொடுத்துள்ளனர்.
இன்று குறித்த மாணவனின் வீட்டிற்கு வந்த புலனாய்வாளர்கள் மாணவனை தாமே கைது செய்ததாக தெரிவித்திருப்பதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இந்த விடயம் குறித்து வீட்டாருடன் தொடர்பு கொள்ள முற்பட்டபோது மிகுந்த அச்சத்தினால் அவர்கள் எந்த தகவலையும் வெளியிட மறுத்துள்ளதாக எமது செய்தியாளார் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவத்தால் அப்பகுதி வாழ் மக்கள் மிகவும் அச்சத்தில் காணப்படுவதாகவும் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.