பக்கங்கள்

பக்கங்கள்

12 டிச., 2012

 யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் வி.பவானந்தன்ஒன்றியச் செயலாளர்.தர்சானந்த்கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்.ஜெனமேஜெயந்த்விஞ்ஞானபீட மாணவன்எஸ்.சொலமன் ஆகிய நால்வரும் வெலிக்கந்தை தடுப்புமுகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறிலங்காகாவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்,
ஏழுபேர் நேற்றுவிடுவிக்கப்பட்டுள்ளநிலையில்ஏனையநான்குமாணவர்களும்வெலிக்கந்தைக்குகொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
ஏழு மாணவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ள போதிலும்,அனைவரும் விடுவிக்கப்பட்டால் தான் தாம் பணிக்குத்திரும்புவோம் என்று யாழ்.பல்கலைக்கழ ஆசிரியர்கள்தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத தடுப்புபிரிவினால்கைதுசெய்யப்பட்டு வவுனியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 11 மாணவர்களில் 7 பேர் நேற்றுவிடுதலை செய்யப்பட்டனர்.
மருத்துவபீட மாணவர்களான .சஞ்சீவன்.பிரசன்னா,சி.சசிகாந்த்செ.ஜனகன்ரி.அபராஜிதன் மற்றும்,முகாமைத்துவபீட மாணவர் .சபேஸ்குமார்,விஞ்ஞானபீட மாணவர் செ.ரேணுராஜ் ஆகியோரேவிடுவிக்கப்பட்டனர்.
அதேவேளையாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் வி.பவானந்தன்ஒன்றியச் செயலாளர்.தர்சானந்த்கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்.ஜெனமேஜெயந்த்விஞ்ஞானபீட மாணவன்எஸ்.சொலமன் ஆகிய நால்வரும் வெலிக்கந்தை தடுப்புமுகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நேற்றுக்காலை வவுனியாவுக்குச் சென்ற உறவினர்களிடம்,இவர்கள் அங்கு இல்லை என்றும் வெலிக்கந்தைக்குகொண்டு செல்லப்பட்டுவிட்டதாகவும் சிறிலங்காகாவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே மாணவர்கள் அனைவரும்விடுவிக்கப்பட்டால் தான் தாம் பணிக்குத் திரும்புவோம்என்று யாழ்.பல்கலைக்கழ ஆசிரியர்கள் சங்கம்தெரிவித்துள்ளது.
மாணவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர்யாழ்பல்கலைக்கழக செயற்பாடுகள் முடங்கிப்போயுள்ளன.அனைத்து மாணவர்களும் விடுதலை செய்யப்படாத வரைஇந்தநிலை தொடரக்கூடும்.” என்று ஆசிரியர் சங்கதலைவர் ஆர்விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.