பக்கங்கள்

பக்கங்கள்

20 டிச., 2012

இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் நாளை ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்கவுள்ளார்.இதேவேளை, மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய இராணுவத் தளபதி வட பகுதி உட்பட நாட்டிலுள்ள பிரதான இராணுவத் தளங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.இந்நிலையில் வெள்ளிக்கிழமை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு விஜயத்தை மேற்கொள்ளும் ஜெனரல் பிக்ரம்சிங், அங்கு புனர்வாழ்வு பெறும் முன்னாள் புலிப்போராளியான தமிழினி உட்பட ஏனைய முன்னாள் புலிப் போராளிகளையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.