பக்கங்கள்

பக்கங்கள்

25 டிச., 2012


இராணுவத்தில் இணைந்த தமிழ்ப் பெண்களின் பெற்றோர் தினக் கொண்டாட்டம்


இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கிளிநொச்சி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி கலந்து கொண்டதுடன், இராணுவத்தின் உயரதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர்.
இராணுவத்தின் பெண்கள் படையணியில் கடந்த நவம்பர் மாதம் 17ம் திகதி இணைந்து கொண்ட தமிழ்ப் பெண்களின் பெற்றோர் தினக் கொண்டாட்டம் கிளிநொச்சி பாதுகாப்புப்
படைத் தலைமையகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டதாக பாதுகாப்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவத்தில் இணைக்கப்பட்டு பயிற்சியின் ஒரு மாதத்தை பூர்த்தி செய்துள்ள அப் பெண்கள் இராணுவ வாழ்வுக்கு தம்மை பழக்கப்படுத்தின் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் இவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் பயிற்சியை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந் நிகழ்வின் போது இவ் யுவதிகள் தமது ஒரு மாத பயிற்சிக் காலத்துக்கான கொடுப்பனவுடனான வங்கி வைப்புப் புத்தகத்தையும் பெற்றுக் கொண்டனர்.