பக்கங்கள்

பக்கங்கள்

10 டிச., 2012


எனது முகநூலுக்குள் விசமிகள் ஊடுருவி தவறான கருத்துக்களை வெளியிடுகின்றனர்: பா.உறுப்பினர் சி.சிறீதரன்
ஊடக விழுமியங்களையும் தர்மங்களையும் மீறி, தமிழின விரோத ஊடக சக்திகள் சிவஞானம் சிறீதரன் என்ற பெயருடைய எனது முகநூல் புத்தகத்துள் ஊடுருவி அண்மைய நாட்களாக என்னால் வெளியிடப்படாத கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
இத்தகைய கருத்துக்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை முதலில் மக்களுக்கும் முகநூல் நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது முகநூல் நீண்ட காலமாக பயன்படுத்தப்படவில்லை. அந்த முகநூல்களின் ஊடாகவே விசமிகள் இப்போது கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
எனவே சிவஞானம் சிறீதரன் என்ற பெயரில் காணப்படும் முகநூல்களை என்னுடையதாக கருதவேண்டாம் என்றும் அதனூடாக வெளிடப்படும் கருத்துக்கள் என்னுடைய கருத்துக்கள் இல்லை என்பதையும் சகலருக்கும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
முன்பு எனது பெயரில் மின்னஞ்சல் மோசடி ஒன்றும் விசமிகளால் செய்யப்பட்டு கண்டறியப்பட்டு அது செய்திகள் வாயிலாக தெளிவுபடுத்தப்பட்டது. ஆகவே எனது உத்தியோகபூர்வ முகநூலின் முகவரியை நான் பின்பு அறியத்தருவேன்.
அதுவரை இப்பொழுது எனது பெயரில் சிங்கள உளவாளியின் தொடர்புடன் வெளிநாடுகளில் வசிக்கும் விசமிகளால் பேணப்படும் முகநூல் புத்தகத்தை எவரும் தொடர்புகொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன் என பா.உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளதோடு, தனது உத்தியோகபூர்வ தொடர்பு முகவரிகளையும் குறிப்பிட்டுள்ளார்.
தொலைபேசி: 021- 3207584, 021 - 2280024
கைபேசி: 077- 6913244
இணைய தளம்- www.shritharan.com