பக்கங்கள்

பக்கங்கள்

1 டிச., 2012


மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டி : பங்களாதேஷ் அபார வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி ஏழு விக்கெட்டுக்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.


பங்களாதேஷ{க்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகின்றது.

இதில் முதலாவது போட்டி இன்று பங்களாதேஷில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்த வகையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 46.5ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில், 200 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 40.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் அணியின் சொஹாக் காஸி தெரிவு செய்யப்பட்டார்
.