பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2012

மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பேராதனை பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் மாணவர்களின் கைதுஇ பெண் மாணவர்களின் விடுதிக்குள் இராணுவத்தினர் நுழைந்தமை ஆகியவற்றை கண்டித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பகல் பாரிய எதிர்ப்பு
ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.




பேராதனை கலஹா சந்தியில் ஒன்று கூடிய மாணவ, மாணவிகள் மற்றும் பௌத்த பிக்குகள் உட்பட்ட நூற்றுக் கணக்கான மாணவர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தி கோ~மிட்டு தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர்.

“வையாதே வையாதே எம் மீது கை வையாதே”, “பல்கலைக்கழகங்களுக்கு உள்ளே இராணுவம் செல்வதை உடன் நிறுத்து” இ “கைது செய்த மாணவர்களை உடன் விடுதலை செய்” போன்ற கோ~ங்களை எழுப்பினர்.