பக்கங்கள்

பக்கங்கள்

2 டிச., 2012

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியிலும் சுவிஸ் பணக்காரர்களிடம் குவிகிறது பணம்
ஐரோப்பா கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இக்கால கட்டத்தில் சுவிட்சர்லாந்தில் மட்டும் பணக்காரர்களிடம் மேலும் மேலும் பணம் குவிகிறது என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
இன்று முதல் முந்நூறு பணக்காரர்களின் சொத்து மதிப்பு 512 பில்லியன் ஃபிராங்க் ஆகும்.

இது, கடந்த ஆண்டின் சொத்து மதிப்பை விட 31 பில்லியன் அதிகமாகும்.
அதாவது பணக்காரர்களின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 6.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
நாட்டில் ஏற்றுமதிகள் குறைந்தபோதும் ஃபிராங்கின் மதிப்பு உறுதியாக நின்றுவிட்ட போதும் இவர்களிடம் பணம் வந்து சேர்ந்து கொண்டே இருக்கிறது.
சுவிஸ் பணக்காரர்களின் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்வீடனைச் சேர்ந்த இங்வார் கம்ப்ராட்(வயது 86)டின் சொத்து மதிப்பு 38, 39 பில்லியன் ஃபிராங்க் ஆகும்.
கடந்த வருடத்தில் இவருடைய சொத்து மதிப்பு இதைவிட மூன்று பில்லியன் ஃபிராங்க் குறைவாகத் தான் இருந்தது என்று Blianz செய்தி குறிப்பிடுகிறது.
இரண்டாவது இடத்திலுள்ள ஜார்ஜ் லேமான், உலகின் மிகப்பெரிய சாராயத் தொழிற்சாலையின் முக்கியப் பங்குதாரர் ஆவார். இவரது சொத்துமதிப்பு இந்த இருமடங்காக உயர்ந்துவிட்டது.
ரஷியாவைச் சேர்ந்த விக்டர் வெகல்ஸ்பர்க் 14, 15 பில்லியன் ஃபிராங்க் மதிப்புடைய சொத்துகளுக்குச் சொந்தக்காரர் ஆவார்.
பணக்காரர் வரிசையில் இவர் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். கடந்த வருடம் இவருடைய சொத்து மதிப்பு 10 பில்லியன் ஃபிராங்க் மட்டும் தான்.
பங்குச் சந்தை வலுவாக இருப்பதால் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகி வருகிறார்கள்.
சுவிஸ் பங்குச் சந்தை குறியீட்டு எண் 24 சதவீதம் உயர்ந்துள்ளது. பணக்காரர்களும் இந்தப் பங்குச்சந்தையில் தான் அதிகமான பணத்தை முதலீடு செய்கிறார்கள்.
முந்நூறு பணக்காரர்களின் சராசரி சொத்து மதிப்பு 17 பில்லியன் ஃபிராங்க் ஆகும்.
இவர்களில் பலர் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தவர்கள் ஆவர். 14 நாடுகளைச் சேர்ந்த 132 பேர் இந்த 300 பேர் அடங்கிய பணக்காரப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மொத்தத்தில் சுவிட்சர்லாந்து 137 கோடீஸ்வரர்களின் இருப்பிடமாக உள்ளது. இவர்களது மொத்த சொத்து மதிப்பு மட்டும் 438 பில்லியன் ஃபிராங்க் ஆகும்.