பக்கங்கள்

பக்கங்கள்

8 டிச., 2012

தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சியினர் வாபஸ்

பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையானது அரசியல் ரீதியானதும் பதவிகளை பாதுகாத்துக் கொள்வதுமான முழுக்க
முழுக்க பக்கச் சார்பானதும் நேர்மையற்றதுமான விசாரணையை அமைத்திருப்பதாக இன்று சபையில் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள் தமது கடுமையான எதிர்ப்பினை வெளிக்காட்டி எதிர்க்கட்சியை சேர்ந்த சகல உறுப்பினர்களும் இன்று சபையிலிருந்து வெளியேறினர்.



பாராளுமன்ற தெரிவுக்குழு கூடி சிறுது நேரத்திற்குள் அதன் நடவடிக்கைகளில் பிணக்கு ஏற்பட்டதையடுத்து தெரிவுக்குழு நடவடிக்கைகளின் இடையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஜோன் அமரதுங்க, லக்~;மன் கிரியெல்ல, இரா. சம்பந்தன் மற்றும் விஜித ஹேரத் ஆகிய நான்கு எம்.பி.க்கள் வெளியேறியிருந்தனர்.

இவ்வாறு தெரிவுக்குழுவிலிருந்து வெளியேறி சபைக்குள் நுழைந்து தெரிவுக்குழு தொடர்பில் தமது கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்
.