பக்கங்கள்

பக்கங்கள்

30 டிச., 2012


இந்தியா- பாகிஸ்தான் ஒருநாள் போட்டியை காண சர்தாரி இந்தியா வருகை
இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
 
2-வது ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் வரும் ஜனவரி 3-ம்தேதி நடைபெறுகின்றது. இந்த ஆட்டத்தை காண பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி வரும் 3-ம்தேதி இந்தியா வரவுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இந்திய ஊடகங்களை மேற்கோள்காட்டி, ''வரும் 3-ம்தேதி கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருடன் அமர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஆசிப் அலி சர்தாரியும் பார்வையிட உள்ளார்'' என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது