பக்கங்கள்

பக்கங்கள்

5 டிச., 2012


பயத்தை விடனும் என்று உணர்ந்தேன்: முன்னணி நடிகையானேன்: திரிஷா

எனது அம்மாவுக்கு சினிமாவில் நான் நடிக்க வந்தது ஆரம்பத்தில் பிடிக்கவில்லை. படிப்புதான் முக்கியம். சினிமா வேண்டாம் என்றார். பிறகு என் பிடிவாதத்தை பார்த்து இறங்கி வந்தார். இரண்டு படங்களில் நடிக்க வேண்டும் சரிப்படாவிட்டால் வந்து விடவேண்டும் என்று சொல்லி அனுப்பினார். ஆனால் அந்த படங்கள் சரியாக போகவில்லை. மூன்றாவதாக ஒரு முயற்சி எடுப்போம் என்று ‘சாமி’ படத்தில் நடித்தேன். அது என்னை பிரபலமாக்கியது. 
திரிஷா 2002-ல் சினிமாவுக்கு வந்தார். 10 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வருகிறார். இத்தனை வருடங்கள் நடிகைகள் கதாநாயகியாக நிலைத்து இருப்பது அரிதான விஷயம்.

இதுகுறித்து திரிஷா கூறியதாவது:- வெற்றி என்பது சுலபமாக வராது. கஷ்டப்பட்டுதான் அதைப் பெறவேண்டும். சினிமாவில் அறிமுகமானபோது எனக்கு ஜெயிக்க முடியுமா என்ற பயம் இருந்தது. அப்படி பயந்தால் முன்னேற முடியாது. பயத்தை விடனும் என்று உணர்ந்து கொண்டேன்.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறேன். இவ்வளவு காலம் சினிமாவில் நீடிப்பதற்கு என் உழைப்பும், அதிர்ஷ்டமுமே காரணம். கடவுளும் எனக்கு துணையாக இருக்கிறார். இவ்வாறு திரிஷா கூறினார்.