பக்கங்கள்

பக்கங்கள்

12 டிச., 2012


நடிகை மனீஷா கொய்ராலாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது
நடிகை மனீஷா கொய்ராலாவுக்கு அமெரிக்காவில் நேற்று கருப்பை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ள நடிகை மனீஷா கொய்ராலாவுக்கு கருப்பையில் புற்றுநோய் இருப்பது கடந்த மாதம் கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

அவருக்கு கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக இருந்து பிறகு 10ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், நேற்ற மனீஷா கொய்ராலாவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடத்த்தப் பட்டதாகவும், அவர் தற்போது பூரண நலத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.