பக்கங்கள்

பக்கங்கள்

12 டிச., 2012



யாழ். மாவட்டத்தில் நவம்பர் கடந்த 26ம் திகதியின் பின்னர் கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களினதும், பொதுமக்களினதும் விடுதலையினை வலியுறுத்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் 21ம் திகதி உண்ணாவிரதப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
இன்று மாலை மாட்டின் வீதியிலுள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்படி அறிவிப்பை
விடுத்திருக்கின்றார்.
இதன்படி தந்தை செல்வா சதுக்கத்தில் 21ம் திகதி காலை 7 மணி தொடக்கம் 4.30மணி வரையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த போராட்டத்தில் கட்சிகள், சமய, சமூகத் தலைவர்கள், பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர், அன்றைய நாளில் புலம்பெயர் நாடுகளிலும், தமிழ் நாட்டிலும் மாணவர்களினதும், பொதுமக்களினதும் விடுதலையினை வலியுறுத்தி போராட்டங்களை நடத்துமாறு அன்புரிமையுடன் தாம் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும்