பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2012


கனடா -ஒண்டோரியோவிலும் க்யுபெக்கிலும் கடுமையான மழை!

 உறையவிக்கும் குளிரும் மழையும் பனியும் ஒண்டோரியோவையும் தென் க்யுபெக்கையும் வாட்டி எடுத்து விட்டது. தெற்கு ஒண்டோரியோவில் கடுமையான மழையைத் தொடர்ந்து உறையவைக்கும்
பனிபொழிவு இருக்கும் என்று வானிலை மையம் தெரிவிக்கிறது. 50 செண்டிமீட்டர் அளவுக்கு பனிப் பொழிவு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மத்திய ஒண்டோரியோவில்தான் பனிப் பொழிவு அதிகம் இருக்கும்.
விடாது பெய்யும் மழையும் பனிப் பொழிவும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்திருக்கிறது. ஒட்டாவாவில் பள்ளிப் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன. 

கடந்த வியாழன் அன்றே கனடா வானிலை மையம், கடுமையான மழையும் பனிப் பொழிவும் இருக்கும் என்று எச்சரித்திருந்தது. கொலராடோ பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் தான் இந்த வானிலை மாற்றத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது