பக்கங்கள்

பக்கங்கள்

2 டிச., 2012


மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு கடும் சவால் ஏற்படக் கூடிய அபாயம்

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை கடும் சவால்களை எதிர்நோக்க நேரிடலாமென சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரஸ்யா, சீனா மற்றும் கியூபா ஆகிய நாடுகள் இம்மு
றை மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கவில்லை. இம்முறை மனித உரிமைப் பேரவையில் கூடுதலாக அமெரிக்க ஆதரவு நாடுகளே அங்கம் வகிக்கின்றன.
இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்செயல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த சில நாடுகளும் இம்முறை அங்கம் வகிக்கின்றன.
புலி ஆதரவாளர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்த இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
2009ம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கை அரசாங்கம் 2013ம் ஆண்டு மனித உரிமைப் பேரவையில் கடும் சவால்களை எதிர்நோக்க நேரிடும் என சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.