பக்கங்கள்

பக்கங்கள்

27 டிச., 2012


பொலிஸ் மீது முன் நாள் இராணுவச் சிப்பாய் துப்பாக்கிச் சூடு: தானும் தற்கொலை செய்தார் 
காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் இராணுவப் படை சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அறியப்படுகிறது. அரலகங்வில சிறிபுர பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ரி56 துப்பாக்கியைப் பயன்படுத்தி, காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது குறித்த முன்னாள் படை சிப்பாய் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

ஆனால் பின்னர், தமக்கு தாமே துப்பாக்கிச் சூடு நடத்தி தற்கொலை செய்து கொண்ட குறித்த முன்னாள் இராணுவச் சிப்பாய், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறை உத்தியோகத்தர்கள் எவரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.