பக்கங்கள்

பக்கங்கள்

25 டிச., 2012


வாணி, சரிகா போல் கெளதமி கல்யாணம் செய்து கொள்ளுமாறு என்னை வற்புறுத்தவில்லை. கமல்
www.thedipaar.com
தான் திருமணமே செய்திருந்திருக்கக் கூடாது என்று உலக நாயகன் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையே இல்லை. நான் திருமணமே முடிக்காமல் இருந்திருக்கணும்.
ஆனால் வாணி, சரிகாவின் வசதிக்காக திருமணம் செய்து கொண்டேன். வாணி லிவ் இன் முறைக்கு ஒப்புக்கொள்ளவே மாட்டார். அவரை சம்மதிக்க வைக்க நான் அப்போது தயாராக இல்லை. இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் நானும், சரிகாவும் ஒன்றாக ஹோட்டலில் தங்கினால் ஒரு மாதிரி பேசும் சமூகமாக இருந்தது. சரிகாவுக்கும், எனக்கும் திருமணமாகி 17 ஆண்டுகள் ஒன்றாக இருந்தோம். 12 ஆண்டுகள் கூட இந்த திருமணம் நீடிக்காது என்று நினைத்தேன்.
ஆனால் எங்கள் பிரிவு குழந்தைகளை பாதிக்கும் என்பதால் தள்ளிப்போட்டுக் கொண்டே போனோம். குழந்தைகள் ஓரளவுக்கு பெரியவர்களாக ஆகும்வரைகாத்திருந்தோம். கௌதமி மிகவும் வித்தியாசமானவர். அவர் தன்னை மணந்து கொள்ளுமாறு ஒரு நாளும் என்னை வற்புறுத்தியதில்லை என்றார்.