பக்கங்கள்

பக்கங்கள்

18 டிச., 2012


ராமநாதபுரத்தில் நடந்த சாலை விபத்தில் கல்லூரி பேராசிரியர், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் பலியானார்கள்.
 
ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி சவுந்தரவள்ளி. இவர் ராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இன்று மாலை தங்கள் குழந்தை கீர்த்தனாவுடன் காரில் சென்றனர்.
 
இவர்கள் சென்ற கார் அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் நசுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய சவுந்திர பாண்டியன், அவரது மனைவி சவுந்தரவள்ளி, மகள் கீர்த்தனா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.