பக்கங்கள்

பக்கங்கள்

18 டிச., 2012


யாழில் தொழில்நுட்ப பாவனையாளர்களை பதிவெடுக்கும் புலனாய்வாளர்கள்
யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு நிலையங்களில தொலைபேசி அழைப்பு மற்றும் இணையத்தள பாவனையாளர்களின் விபரங்களை பதிவு செய்யுமாறு  புலனாய்வாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கு அமைய கோப்பாய், கோண்டாவில், உரும்பிராய் பகுதிகளில் உள்ள தொலைத்தொடர்பு நிலையங்கள், இன்ரநெற் நிலையங்கள் மற்றும் தொலைபேசி விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இந்த பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதற்காக இந்த நடவடிக்கை என்று பாவனையாளர்கள் கேட்டபோது  கோண்டாவில் பகுதியில் சிங்கள இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமையை அடுத்து பதிவுகளை மேற்கொள்ளுமாறு புலனாய்வாளர்கள் உத்தரவிட்டுள்ளதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர்.