பக்கங்கள்

பக்கங்கள்

31 டிச., 2012


இலங்கை தமிழர் அழிவுக்கு கருணாநிதி காரணம்! அ.தி.மு.க.செயற்குழுவில் கண்டன தீர்மானம்

சென்னை வானகரத்தில் இன்று காலை கட்சியின் பொதுசெயலர் ஜெ., தலைமையில் அ.தி.மு.க., செயற்குழு , பொதுக்குழு கூடியது.இலங்கை தமிழர் அழிவிற்கு காரணமாக இருந்து கபட நாடகம் ஆடியதாக தி,மு.க., தலைவர் கருணாநிதிக்கு
அ.தி.மு.க,. செயற்குழுவில் இன்று கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின் போது இலங்கை தமிழர் விவகாரத்தில் கருணாநிதியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை தமிழர் விவகாரத்தில் தமிழர்களின் அழிவுக்கு காரணமாக இருந்து கபட நாடகம் ஆடும் கருணாநிதிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டும் உள்ளிட்ட 25  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.