பக்கங்கள்

பக்கங்கள்

16 டிச., 2012


Sri Lanka Rebel Wedding Pictures & Photosமுல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைப்பகுதியிலுள்ள சில கிராமங்களில் கட்டாயப்படுத்தி இராணுவத்தினருக்கு தமிழ் யுவதிகளை திருமணம் செய்து கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக தெரியவருகின்றது.
Sri Lanka Rebel Wedding Pictures & Photos

மிகவும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த தகவல் குறித்து தமிழ் அரசியல் தலைமைகள் அறிந்திருக்காமை மிகவும் ஆபத்தானது என சமுக ஆர் வலர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
குறிப்பாக இவ்விரு மாவட்டங்களினதும் எல்லைப்பகுதியிலுள்ள விசுவமடு, பிரமந்தனாறு, குமாரசாமிபுரம், போன்ற கிராமங்களில் சுமார் 100பேருக்கு ஒரு பெண் இராணுவச் சிப்பாயை திருமணம் முடித்திருப்பதாக சில ஆய்வுகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
மேலும் இராணுவச் சிப்பாயை குடும்பத் தலைவராக கொண்டு இந்தக் குடும்பங்களுக்கு குடும்ப பங்கீட்டு அட்டைகளும் வழங்கப்பட்டிருப்பதுடன், இவ்வாறு இராணுவச் சிப்பாய்களைத் திருமணம் முடித்துக்கொண்ட குடும்பங்களுக்கு அதிக வசதி வாய்ப்புக்களும் செய்து கொடுக்கப்படுகின்றது.
எனினும் இந்த திருமணங்கள் அனைத்தும் இராணுவத்தினரின் கட்டாயத்தின் பெயரிலேயே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
மேலும் இந்த நடவடிக்கை ஒரு திட்டமிட்ட இனக்கலப்பிற்கான முதற்கட்ட நடவடிக்கையாகவும் அமைந்திருக்கின்றது.