பக்கங்கள்

பக்கங்கள்

25 டிச., 2012


காதலிக்க கற்றுக்கொள்கிறான் என்று தூற்றுகிறார்கள்! திருமாவளவன் பேச்சு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 50வது பிறந்தநாளை பொன்விழாவாக அறிவித்து அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

ஈரோட்டில் 24.12.2012 அன்று மாலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் வினாகமூர்த்தி தலைமையில் பொன்விழா மற்றும் பொற்காசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், பெரியார் தமிழகம் முழுவதும் பயணம் செய்து எந்த சாதியம் அழிய வேண்டும் என்று பேசினாரோ, அது மீண்டும் தலை தூக்குகிறது. தருமபுரி சம்பவத்தை தொடர்ந்து திருமாவளவன் காதலிக்க கற்றுக்கொள்கிறான் என்று தூற்றுகிறார்கள். தினமும் அவதூறுகளை கூறுகிறார்கள். 
தருமபுரியில் நடந்த சம்பவம் திட்டமிடப்பட்ட செயல். இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டுள்ளோம். இதேபோன்ற கருத்துக்களை கூறிய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, திராவிடர் கழகம் ஆகியோரிடம் மோத முடியாமல், கேட்க ஆள் இல்லாதவன் என்று விடுதலை சிறுத்தைகளுடன் மோதுகின்றனர். 
ஈரோட்டில் 50 பொற்காசுகள் வழங்கப்பட்டதுடன் சேர்ந்து 21 மாவட்டங்களில் இருந்து இதுவரை 20 கிலோ தங்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வழங்கி உள்ளனர் என்றார். 
-நமது நிருபர்