பக்கங்கள்

பக்கங்கள்

11 டிச., 2012


த.தே. கூட்டமைப்பின் தீவக அமைப்பாளர் நிசாந்தன் வீட்டில் கைக்குண்டுத் தாக்குதல்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தீவக அமைப்பாளர் நிசாந்தன் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
எனினும், இச்சம்பவத்தில் எவருக்கும் ஆபத்துக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஈ.பி.டி.பியினரின் ஊழல்களை வெளிக்கொணர்ந்து மாநகர சபையிலிருந்து விலகி தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கொண்ட நிசாந்தன் அண்மைக்காலத்தில் கூட்டமைப்பின் தீவகத்திற்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இதன் பின்னர் தீவகத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் அதிகரித்ததோடு, சமகாலத்தில் யாழ். குடாநாட்டில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நிசாந்தன் கடுமையான எதிர்ப்பையும் அறிக்கைகளையும் விடுத்துவந்தார்.
இது இராணுவத்தினருக்கும், அவர்களோடு சேர்ந்தியங்கும் சில ஒட்டுக்குழுக்களுக்கும் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையிலேயே தற்போது 9.20மணியளவில் வைமன் வீதியிலுள்ள அவரது வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.