பக்கங்கள்

பக்கங்கள்

3 டிச., 2012


யாழில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பேருந்தும், கிளிநொச்சியில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பேருந்தும் விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
யாழில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு முல்லைத்தீவை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், கிளிநொச்சியில் பயணிகளை இறக்கி விட்டு யாழ் நோக்கி திரும்பி வந்த தனியார் பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்து இன்று (03) காலை 7 மணியளவில் நாவற்குழி பாலத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் யாழ் .போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பேருந்து அதிவேகமாக பயணித்தமையே விபத்திற்கான காரணம் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.