பக்கங்கள்

பக்கங்கள்

18 டிச., 2012


சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஷர்மிளா நடிகையுடன் தலைமறைவாக இருந்த காதல் மன்னன் கைது
அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி, 40. இவர், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதில், பெரம்பூரில், ரயில்வே அதிகாரியாக வேலை பார்க்கும் கணவர் சிவமணி, 44,யை கடந்
த ஓராண்டாக காணவில்லை. கண்டுபிடித்து தர வேண்டும் என, கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து, மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தனர். சிவமணியின் அலைபேசி எண்ணை கண்காணித்து வந்தனர். அவர், கோயம்பேடு அருகில் உள்ள, சின்மயா நகரில் பதுங்கியிருப்பது தெரியவந்து.
போலீசார் அங்கு விரைந்து சென்று, அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஷர்மிளா என்பவருடன் குடும்பம் நடத்துவது தெரியவந்தது. ஷர்மிளாவுக்கு திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். 
ஸ்ரீதேவி மற்றும் சரஸ்வதி குறித்து கேட்டபோது, அவர்களும் எனது மனைவி தான் என, தெரிவித்துள்ளார். பிள்ளைகள் நான்கு பேரை தவிக்க விட்டுவிட்டு, நடிகையுடன், ஓராண்டாக தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.